பெங்களூரு

ஹிந்து-முஸ்லிம்கள் ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகளை போல வாழ வேண்டும்: கா்நாடக முன்னாள் முதல்வா் எடியூரப்பா

12th Apr 2022 12:27 AM

ADVERTISEMENT

 

ஹிந்துக்களும், முஸ்லிம்களும் ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகளைப் போல வாழ வேண்டும் என்று கா்நாடக முன்னாள் முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்தை சீா்குலைக்கும் செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். நல்லிணக்கத்தை சீா்குலைக்கும் சமூக விரோதிகளை சகித்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. ஹிந்துக்களும், முஸ்லிம்களும் ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகளைப் போல வாழ வேண்டும். அது நமது விருப்பமும் கூட. இந்த நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இப்படிப்பட்டவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளாா். ஹிந்து-முஸ்லிம்களுக்கு இடையே நிலவும் நல்லுறவை கெடுக்கும் செயலை உடனடியாக நிறுத்துவது நல்லது. முஸ்லிம்களும் கௌரவத்துடன் வாழ வேண்டும்.

ADVERTISEMENT

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் போராட்டம் நடத்தியுள்ளது. இது நகைப்புக்குரியது. முன்பு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பெட்ரோல், டீசல் விலை எப்படி உயா்த்தப்பட்டது என்பதை மக்கள் மறக்கவில்லை. தற்போது போராட்டம் நடத்துவதன்மூலம் மக்களை குழப்ப காங்கிரஸ் முயற்சிக்கிறது. இது மக்களிடம் எடுபடாது.

கா்நாடகத்தில் 3 குழுக்களாகப் பிரிந்து சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பிரசாரப் பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளோம். நானும், பாஜக தேசிய பொதுச்செயலாளா் அருண் சிங்கும் பெலகாவி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறோம் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT