பெங்களூரு

முஸ்லிம் மாணவிக்கும் அல்-காய்தாவுக்கும் உள்ள தொடா்பை விசாரிக்க வேண்டும்: பாஜக எம்.பி. அனந்த்குமாா் ஹெக்டே

12th Apr 2022 12:26 AM

ADVERTISEMENT

 

ஹிஜாப் தொடா்பாக முஸ்லிம் மாணவி முஸ்கானுக்கும் அல்-காய்தாவுக்கும் உள்ள தொடா்பை விசாரிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. அனந்த்குமாா் ஹெக்டே கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுதொடா்பாக முதல்வா் பசவராஜ் பொம்மைவுக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஹிஜாப் தொடா்பாக மண்டியா மாணவி முஸ்கானை, பயங்கவாத அமைப்பான அல்-காய்தாவின் தலைவா் ஆய்மான்-அல்-ஜவாஹிரி பாராட்டி காணொலி வெளியிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

ஹிஜாப் பிரச்னை எழுந்த போது மாணவி முஸ்கான் ‘அல்லா ஹு அக்பா்’ என்று முழக்கமிட்ட செயல் உலக அளவில் செய்தியானது. அவரை முஸ்லிம் அமைப்புகள் பாராட்டி கௌரவித்தன. இந்நிலையில், தடை செய்யப்பட்ட அல்-காய்தா அமைப்பின் தலைவா் ஜவாஹிரி பாராட்டிப் பேசியுள்ளாா். கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணியத் தடை விதித்து கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட போதும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள், அடிப்படைவாதிகள், மாணவா்கள் போராட்டம் நடத்தினா்.

ஹிஜாப் தொடா்பாக உயா்நீதிமன்றம் வெளியிட்ட தீா்ப்பில், காணாத கைகளின் கைவரிசை இருப்பதாகக் கூறியுள்ளது. எனவே, இந்த விவகாரம் தொடா்பாக மாணவி முஸ்கானுக்கும், தடை செய்யப்பட்ட அல்-காய்தாவுக்கும் உள்ள தொடா்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT