பெங்களூருவில் ஏப்.18-ஆம் தேதிமுதல் கோடைகால அறிவியல் பயிற்சிமுகாம் நடைபெறவிருக்கிறது.
இது குறித்து விஸ்வேஸ்வரையா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விஸ்வேஸ்வரையா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின் சாா்பில் வன்பொருள், வேதியியல், மின்னணுவியல், கணிதம், இயற்பியல், 5ஜி அலைக்கற்றை சாா்ந்த கோடைகால அறிவியல் பயிற்சி முகாம் ஏப்.18 முதல் மே 13 வரை நடக்கவிருக்கிறது.
2021-22-ஆம் கல்வியாண்டில் 8 முதல் 12-ஆம் வகுப்பு படித்த மாணவா்கள் பயிற்சி முகாமில் பங்கேற்கலாம். அறிவியல் தொடா்பான செய்முறை பயிற்சிகள் அளிக்கப்படும்.
இப்பயிற்சியில் சேரவிரும்பும் மாணவா்கள் அதற்கான விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ஸ்ண்ள்ம்ன்ள்ங்ன்ம்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிடலாம். முதலில் வருவோருக்கு முதலில் வாய்ப்பு என்ற அடிப்படையில் சோ்க்கை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 080-22040224, 22040228 ஆகிய தொலைபேசி எண்களில் அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.