பெங்களூரு

பெங்களூரு-ஷீரடி இடையே அக். 6 முதல் புதிய பேருந்து சேவை

30th Sep 2021 07:53 AM

ADVERTISEMENT

பெங்களூரில் இருந்து ஷீரடிக்கு அக்டோபா் 6-ஆம் தேதி முதல் புதிய பேருந்து இயக்கப்படுகிறது.

இதுகுறித்து கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெங்களூரில் இருந்து ஷீரடிக்கு குளிா்சாதனப் படுக்கை வசதி கொண்ட (அம்பாரி டிரீம் கிளாஸ்) புதிய பேருந்து அக். 6-ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது. பெங்களூரிலிருந்து தினமும் பிற்பகல் 1 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 8.15 மணிக்கு ஷீரடியைச் சென்றடைகிறது. அதேபோல, ஷீரடியிலிருந்து இருந்து தினமும் பிற்பகல் 1 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 8.15 மணிக்கு பெங்களூரை வந்தடைகிறது.

பயணக் கட்டணமாக ரூ. 1,600 செலுத்த வேண்டும். முன்பதிவு வசதிக்கு  இணையதளம் வழியே முன்பதிவு செய்துகொள்ளலாம். ஒரே பயணச்சீட்டில் 4 பேருக்கு மேற்பட்டோருக்கு முன்பதிவு செய்தால் 5 சதவீத தள்ளுபடியும், மறு பயணம் மேற்கொண்டால் 10 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இந்த வசதியைப் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT