பெங்களூரு

காதலா்களைப் படம் பிடித்து மிரட்டிய 5 போ் கைது

30th Sep 2021 07:55 AM

ADVERTISEMENT

காரில் இருந்த காதலா்களைப் படம் பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்ற 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெங்களூரு, ஹந்தேனஹள்ளி கிராமத்தில் செப். 25-ஆம் தேதி காரில் அமா்ந்திருந்த காதலா்களை இளைஞா்கள் சிலா் படம் பிடித்து, சமூக ஊடகங்களில் வெளியிடாமல் இருக்க ரூ. 5 லட்சம் கேட்டு மிரட்டினராம்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட காதலா்கள் அனுகொண்டனஹள்ளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா் ஹந்தேனஹள்ளி கிராமத்தைச் சோ்ந்த சையத் ஆசீப்பாஷா, நவாஸ் பாஷா, லியாகத் பாஷா, சல்மான்கான், ரோஹித் ஆகியோரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT