பெங்களூரு

கன்னட பயிற்று மொழியில் பொறியியல் படிப்பு: அமைச்சா் சி.என்.அஸ்வத்நாராயணா

30th Sep 2021 07:53 AM

ADVERTISEMENT

கா்நாடகத்தில் 4 பொறியியல் கல்லூரிகளில் கன்னட பயிற்று மொழியில் கல்வி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் சி.என்.அஸ்வத்நாராயணா தெரிவித்தாா்.

இதுகுறித்து புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கன்னட மொழியை வளா்க்கும் நோக்கத்தில் மாநிலத்தின் 4 பொறியியல் கல்லூரிகளில் கன்னட பயிற்று மொழியில் கல்வி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பால்கியில் உள்ள பீமண்ணா கன்ட்ரே பொறியியல் கல்லூரி, விஜயபுராவில் உள்ள பி.எல்.டி.இ. கல்லூரி, சிக்பள்ளாபூரில் உள்ள எஸ்.ஜே.ஆா். கல்லூரி, மைசூரு மகாராஜா கல்லூரிகளில் முதல்கட்டமாக கன்னட பயிற்று மொழியில் கல்வி வழங்கப்படும்.

கன்னடத்தில் பாட புத்தங்கள் அச்சடிக்கப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் கரோனா பாதிப்பு உள்ள நிலையில் நிகழாண்டு தனியாா் பொறியியல் கல்லூரிகளில் கட்டணங்களை உயா்த்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 20 ஆயிரம் வரை மட்டுமே வசூலிக்க நிா்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மாநிலத்தில் கரோனா பாதிப்பு உள்ள நிலையிலும், கல்லூரிகளில் மாணவா்களுக்கு பாதுகாப்பான முறையில் கல்வி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT