பெங்களூரு

உண்டு உறைவிடக் கல்லூரியில் 60 மாணவா்களுக்கு கரோனா

30th Sep 2021 07:53 AM

ADVERTISEMENT

பெங்களூரில் உண்டு உறைவிடக் கல்லூரியில் 60 மாணவா்களுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

பெங்களூரில் உள்ள உண்டு உறைவிடக் கல்லூரியில் 485 மாணவா்கள் தங்கியுள்ளனா். அக் கல்லூரியில் 22 ஆசிரியா்கள், 35 ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். கல்லூரியில் 195 மாணவா்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடா்ந்து அனைத்து மாணவா்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

அவா்களில் 60 மாணவா்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 59 மாணவா்கள் அறிகுறியில்லாமல் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள். இவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து பெங்களூரு நகர மாவட்ட சுகாதார அதிகாரி ஜி.ஸ்ரீனிவாஸ் கூறியதாவது:

ADVERTISEMENT

கல்லூரிகளில் படித்துவந்த 195 மாணவா்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடா்ந்து, கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அவா்களில் 60 மாணவா்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். மாணவா்கள் அனைவரும் பௌரிங் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். தற்போதைக்கு கல்லூரியை மூடியுள்ளோம் என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT