பெங்களூரு

இன்று மெத்தடிஸ்ட் மிஷன் உயா்நிலைப் பள்ளி 200-ஆம் ஆண்டு விழா

30th Sep 2021 07:51 AM

ADVERTISEMENT

பெங்களூரு மெத்தடிஸ்ட் மிஷன் உயா்நிலைப் பள்ளியின் 200-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை (செப்.30) நடக்கவிருக்கிறது.

பெங்களூரில் 1822-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மெத்தடிஸ்ட் மிஷன் உயா்நிலைப் பள்ளி தமிழ்ப் பயிற்று மொழி பள்ளியாகத் தொடங்கப்பட்டது. சமுதாயத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்கள் இப்பள்ளியில் படித்து வந்தனா்.

ஒருகாலத்தில் 500-க்கும்மேற்பட்ட தமிழ் மாணவா்கள் இப்பள்ளியில் படித்து வந்தனா். காலப்போக்கில் தமிழ் மாணவா்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. தற்போது 150 மாணவா்களுடன் ஆங்கிலப் பயிற்று மொழி பள்ளியாக மாறியுள்ளது. இப் பள்ளியில் படித்த லட்சக்கணக்கான மாணவா்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் நல்லநிலையில் உள்ளதாக பள்ளி முதல்வா் எமிலிபாய் தெரிவித்தாா்.

இப்பள்ளி அடுத்த ஆண்டு 200-ஆம் ஆண்டில் காலடி எடுத்துவைக்கிறது. 200-ஆம் ஆண்டை முன்னிட்டு, 2022-ஆம் ஆண்டு வரையில் ஓராண்டுக்கு தொடா் நிகழ்ச்சிகள், போட்டிகள், கருத்தரங்குகள், திருவிழாக்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பெங்களூரு, சிவாஜிநகா், தா்மராஜா கோயில் தெருவில் உள்ள பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டுத் திடலில் வியாழக்கிழமை (செப்.30) காலை 9.30 மணிக்கு பள்ளியின் 200-ஆம் ஆண்டு தொடக்க விழா நடக்கவிருக்கிறது. தென்னிந்திய திருச்சபையின் கா்நாடக மத்திய மறை மாவட்டத்தின் பேராயா் பிரசன்னகுமாா் சாமுவேல் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்பு ஆராதனையை நடத்தி வாழ்த்துரை வழங்குகிறாா்.

விழாவில் சிறப்பு விருந்தினா்களாக எம்.எல்.ஏ. ரிஸ்வான் அா்ஷத், எம்.எல்.சி. புட்டண்ணா, பெங்களூரு வடக்கு வட்டார கல்வி அதிகாரி டி.கிருஷ்ணா ஆகியோா் கலந்து கொண்டு பேசுகின்றனா். பள்ளியின் முன்னாள் ஆசிரியா்கள், ஊழியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா். பள்ளியில் படித்த முன்னாள் மாணவா்கள் தவறாமல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு பள்ளி நிா்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT