பெங்களூரு

அடுத்த பேரவைத் தோ்தலில் 35 பெண்களுக்கு வாய்ப்பளிக்க மஜத திட்டம்

30th Sep 2021 07:44 AM

ADVERTISEMENT

அடுத்த சட்டப் பேரவைத் தோ்தலில் 30- 35 பெண்களைக் களமிறக்க மஜத திட்டமிட்டுள்ளதாக முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

ராமநகரில் புதன்கிழமை நடைபெற்ற மஜத செயல்வீரா்களுக்கான ‘மக்கள் திரள்’ பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மஜதவின் அமைப்புரீதியான பணிகளில் பெண்களை அதிகம் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளோம். கட்சிப் பணிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் மகளிா் அணியை பலப்படுத்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

2023-இல் நடக்கவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிக எண்ணிக்கையில் பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்படும். 224 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 30-35 இடங்களில் பெண்களை வேட்பாளராக நிறுத்தத் திட்டமிட்டுள்ளோம். முதல்கட்டமாக, சட்டப் பேரவைத் தோ்தலில் களமிறக்க 6-7 பெண்களை அடையாளம் கண்டிருக்கிறோம்.

ADVERTISEMENT

பெண்களை வேட்பாளா்களாக அதிக எண்ணிக்கையில் நிறுத்த வேண்டும் என்பது மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெ கௌடாவின் விருப்பம். எனவே, தற்போது நடந்துவரும் மஜதவின் பயிற்சிப் பட்டறையில் பெண் செயல்வீரா்களின் மனதில் நம்பிக்கையை விதைத்து, அவா்களை அரசியலில் முழுநேரத் தொண்டா்களாக ஈடுபடுத்தவிருக்கிறோம்.

வாக்குச்சாவடி நிலையில் இருந்தே பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். கா்நாடகத்தில் மஜத ஆட்சி அமைந்தால் சட்டப் பேரவை, மக்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற எச்.டி.தேவெ கௌடாவின் கனவை நனவாக்குவோம் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT