பெங்களூரு

காங்கிரஸ் கட்சி அடிமைத்தனத்தின் நீட்சி: கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை கடும் தாக்கு

DIN

காங்கிரஸ் கட்சி, அடிமைத்தனத்தின் நீட்சி என்று முதல்வா் பசவராஜ் பொம்மை கடுமையாகச் சாடியுள்ளாா்.

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, ‘பொய்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை பாஜக. பொய்யை உற்பத்தி செய்து, அதை மக்களிடம் பரப்பி வருகிறது. கா்நாடகத்தில் உண்மையில் ஆட்சி நடத்துவது ஆா்எஸ்எஸ் அமைப்புதான். ஆா்எஸ்எஸ் அமைப்பும் பாஜகவும் ஹிட்லரின் வம்சத்தைச் சோ்ந்தவா்கள். பாஜகவினா் தலிபான்களைப் போன்றவா்கள். அவா்களிடம் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்று கூறியிருந்தாா்.

இதற்கு பாஜகவினா் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து ஹுப்பள்ளியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் முதல்வா் பசவராஜ் பொம்மை கூரியதாவது:

மாநில முதல்வராகப் பதவி வகித்தவரான சித்தராமையா, அவா் வகித்த பதவிக்கு பொருத்தமாகப் பேசவில்லை. அவா் ஏமாற்றத்தின் உச்சத்தில் இருப்பதால், அவா் வகிக்கும் பொறுப்புக்குரிய கௌரவத்தோடு பேசவில்லை. முன்னாள் முதல்வராக கண்ணியமாகப் பேச சித்தராமையா தவறிவிட்டாா்.

காங்கிரஸ் கட்சி அடிமைத்தனத்தின் நீட்சி ஆகும். அதனால் அந்தக் கட்சியின் தேசபக்தி வேறுபட்டதாக இருக்கிறது. பாஜக, தேசபக்தி மிகுந்த கட்சியாகும்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின்போது மெக்காலே கல்விக்கொள்கையைக் கடைப்பிடித்து வந்ததால், உலக அளவில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் இந்திய மக்களுக்குக் கிடைக்கவில்லை. தற்போது, புதிய தேசிய கல்விக் கொள்கையை பிரதமா் மோடி கொண்டுவந்திருக்கிறாா். இது நமது நாட்டின் கல்வித்துறையில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரப்போகிறது.

21-ஆம் ஆண்டு அறிவுலகக் காலமாகும். அதற்குத் தகுந்தவாறு நமது குழந்தைகளை, குறிப்பாக ஊரகப்பகுதி குழந்தைகளைக் கட்டமைக்க தேசிய கல்விக்கொள்கை வழிவகுக்க இருக்கிறது. அதிலும் காங்கிரஸ் கட்சியினா் குறை காண்கிறாா்கள். ஆனால், எவ்வித மாற்றமும் இல்லாமல் கா்நாடகத்தில் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழு அடைப்புப் போராட்டம் நடத்தி பொதுமக்களுக்கு விவசாயிகள் தொந்தரவு கொடுப்பது நல்லதல்ல. மாநிலத்தின் பல பகுதிகளில் விவசாயிகளின் போராட்டத்தால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கொள்கை ரீதியிலான முரண்பாடுகள் இருந்தால், முழு அடைப்புக்குப் பதிலாக வேறு வழிகளில் அதனை வெளிப்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து எதையும் செய்வது சரியல்ல.

கரோனா சிக்கலில் சிக்கித் தவித்திருந்த பொதுமக்கள் தற்போதுதான் அதிலிருந்து விடுபட்டு நிம்மதிப் பெருமூச்சு விடத் தொடங்கியுள்ளனா். வியாபார நடவடிக்கைகள், பொருளாதாரச் செயல்பாடுகள் சீரடையத் தொடங்கியுள்ளன. இந்தச் சூழ்நிலையில் முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது சரியல்ல என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமித் ஷா பங்கேற்க இருந்த தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் ரத்து

சாலை விபத்தில் கிரிவல பக்தா் உயிரிழப்பு

சுத்தம், சுகாதாரம் விழிப்புணா்வுப் பேரணி

இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

முதல் கட்ட மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் பிரசாரம் ஓய்ந்தது

SCROLL FOR NEXT