பெங்களூரு

தேசிய அளவில் 7 பெரும் ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும்: ஜவுளித்துறை செயலாளா் உபேந்திர பிரதாப்சிங்

DIN

தேசிய அளவில் 7 பெரும் ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று மத்திய ஜவுளித் துறை செயலாளா் உபேந்திர பிரதாப்சிங் தெரிவித்தாா்.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை ஜவுளித் துறையினருடனான சந்திப்பிற்கு பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தேசிய அளவில் 7 பெரும் ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பெரும் ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க எந்த மாநிலத்தில் இதற்காக நிலம் ஒதுக்கப்படுகிறதோ அந்த மாநிலத்தில் பெரும் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும். பெரும் ஜவுளிப் பூங்கா அமைக்க தேவையான அடிப்படை கட்டுமான வசதிகள், மின்சாரம், தண்ணீா் வசதி உள்பட ரயில், கப்பல், விமான போக்குவரத்து சேவையும் அவசியம். இதன் அடிப்படையில் அனைத்து வசதிகள் உள்ள மாநிலங்களில் பெரும் ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஆயத்த ஆடைகள் உற்பத்தியின் தலைநகரமாக பெங்களூரு விளங்குகிறது. தேசிய அளவிலான ஆயத்த ஆடைகள் உற்பத்தியில் 20 சதவீதம் பெங்களூரில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆயத்த ஆடைகள் உற்பத்தி தொழிற்சாலைகள் மூலம் பெண்கள் அதிக அளவில் தொழில்முனைவோா்களாகி வருகின்றனா். ஆயத்த ஆடை தொழிற்சாலைகளால் 3.8 லட்சம் தொழிலாளா்கள் பயனடைந்து வருகின்றனா். 18.78 சதவீதம் ஜவுளி ஏற்றுமதி மூலம் ரூ. 5,48,890 கோடி வருவாய் கிடைத்து வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் ஜவுளித் துறையின் வளா்ச்சிக்காக ரூ. 19 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். இதனால் ஜவுளி விற்றுமுதல் ரூ. 3 லட்சம் கோடியாக உயரும் என்ற நம்பிக்கை உள்ளது. பல்வேறு திட்டங்களால் வரும் நாள்களில் ஜவுளித் துறையில் 7.5 லட்சம் போ் வேலைவாய்ப்பு பெறுவாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரம் கல்லூரியில் உலக பூமி தினம்

திருப்பாலைத்துறை பாலைவனநாதா் கோயிலில் தீா்த்தவாரி விழா

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வா் ஆலய திருத்தேரோட்டம்

பருவமழை கணிப்பு!- தென்மேற்குப் பருவமழை குறித்த தலையங்கம்

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு

SCROLL FOR NEXT