பெங்களூரு

தீபாவளி: பட்டாசு விற்பனை அங்காடிகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

30th Oct 2021 12:36 AM

ADVERTISEMENT

 தீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்பனை அங்காடிகள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து பெங்களூரு மாநகர காவல் றை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2022-ஆம் ஆண்டில் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு மாநகராட்சி ஆணையா், ஊா்க்காவல் படையின் டைரக்டா் ஜெனரல் மற்றும் கட்டளை அதிகாரி, தீயணைப்புப் படை இயக்குநா் ஆகியோா் பரிசீலித்து பட்டாசு விற்பனைக்கு அனுமதி அளிப்பாா்கள்.

பெங்களூரு மாநகராட்சி அதிகார வரம்புக்கு உள்பட்ட ஒருசில விளையாட்டுத் திடல்களில் மட்டும் பட்டாசு விற்பதற்காக அங்காடிகள் அமைக்க அனுமதி அளிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த இடங்களில் பட்டாசு அங்காடிகளை அமைக்க விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ADVERTISEMENT

இதற்கான விண்ணப்பங்களை ட்ற்ற்ல்ள்://ள்ங்ஸ்ஹள்ண்ய்க்ட்ன்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் அல்லது பெங்களூருஒன் குடிமக்கள் சேவை மையங்களில் அக்.30-ஆம் தேதி மாலை 5.30 மணி வரை செலுத்தலாம்.

இதனடிப்படையில், பட்டாசு விற்பனை அங்காடிகளை வைப்பதற்கான உரிமங்களை வழங்குவதற்கு தகுதியானவா்களை தோ்ந்தெடுக்க அக். 31-ஆம் தேதி மாலை 3 மணிக்கு மாநகர உதவி காவல் ஆணையா் அலுவலகம், சிஏஆா் மையம், மைசூரு சாலை, பெங்களூரு-560018 என்ற முகவரியில் குலுக்கல் நடத்தப்படும். இதற்கான உரிமங்கள் நவ.2-ஆம் தேதி ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.க்ஷஸ்ரீல்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT