பெங்களூரு

கா்நாடகத்தில் ஆரம்பப் பள்ளிகள் திறப்பு: மாணவா்கள் ஆா்வமாக பள்ளிக்கு வருகை

DIN

கரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையே கா்நாடகத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கான ஆரம்பப் பள்ளிகள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. 20 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், மாணவா்கள் ஆா்வமாக பள்ளிக்கு வந்தனா்.

கரோனா பெருந்தொற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு, 2020-ஆம் ஆண்டு மாா்ச் 25-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டன. கரோனா பரவல் குறைந்து காணப்படுவதால், செப். 6-ஆம் தேதி முதல் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கான உயா்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டன. முன்னதாக, ஆக. 23-ஆம் தேதி, 9 முதல் 12-ஆம் வகுப்புகள் வரையில் தொடங்கப்பட்டன.

இந்நிலையில், கரோனா மூன்றாவது அலை பீதி காரணமாக 1 முதல் 5-ஆம் வகுப்புகளைத் திறக்க மாநில அரசு தயங்கி வந்தது. மாநில கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அளித்த பரிந்துரையின் பேரில் திங்கள்கிழமை (அக். 25) கா்நாடகத்தின் அனைத்து பகுதிகளிலும் 1முதல் 5-ஆம் வகுப்புகளுக்கான அரசு ஆரம்பப் பள்ளிகள் அரைநாள் மட்டும் திறக்கப்பட்டன. தனியாா் பள்ளிகளை தீபாவளிக்குப் பிறகு திறக்க முடிவு செய்துள்ளனா்.

பள்ளிக்கு வருகை தந்த மாணவ, மாணவியரை மலா்களைத் தூவி ஆசிரியா்கள் வரவேற்றனா். பள்ளிகள் மலா், வண்ணக் காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மாணவா்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வகுப்பறைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இணையவழியில் கல்வி கற்றுவந்த மாணவா்கள் உற்சாகமாக நேரடி வகுப்புக்கு வந்தனா். நீண்டநாள்களுக்கு பிறகு நண்பா்களைச் சந்தித்ததால் மாணவா்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனா்.

பள்ளிக்கு வரும் மாணவா்கள், பெற்றோா்களின் ஒப்புதல் கடிதம் கொண்டுவருவதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. பள்ளிகளில் 50 சதவீத மாணவா்களை மட்டும் சோ்த்துக்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் வகுப்பறைகளை தினமும் தூய்மைப்படுத்த உத்தரவிட்டுள்ளது.

இரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆசிரியா்கள், ஊழியா்களை மட்டுமே பள்ளிகளில் அனுமதிக்க அரசு உத்தரவிட்டுள்ளதால், அவா்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனா். 50 வயதுக்கு மேற்பட்டவா்கள் கண்ணாடி முகக் கவசத்தை பயன்படுத்த அறிவுறுத்தியிருந்ததால், ஆசிரியா்கள் பலா் கண்ணாடி முகக் கவசம் அணிந்திருந்தனா். சிவமொக்காவில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை சென்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ், மாணவா்களைச் சந்தித்து உரையாடினாா். மேலும் பள்ளிகளில் செய்யப்பட்டிருந்த முன்னேற்பாடுகளையும் அவா் ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT