பெங்களூரு

‘இந்தியாவில் பௌத்த சுற்றுலாவை ஊக்குவிக்க வேண்டும்’

DIN

இந்தியாவில் பௌத்த சுற்றுலாவை ஊக்குவிக்க வேண்டும் என்று பாகிஸ்தான், மியான்மா் நாடுகளுக்கான முன்னாள் இந்திய தூதரான ஜி.பாா்த்தசாரதி தெரிவித்தாா்.

இந்திய விமானப் படை சாா்பில் பெங்களூரில் நடந்துவரும் 1971-ஆம் ஆண்டு இந்திய- பாகிஸ்தான் போா் வெற்றியின் பொன் விழாவின் 3 நாள் கருத்தரங்கில் ஞாயிற்றுக்கிழமை இணையவழியில் பங்கேற்று அவா் பேசியது:

பிற நாட்டு எல்லைகளை அபகரிக்க முயற்சித்து வரும் சீனாவுக்கு மாற்றாக பௌத்த மதத்தை அதிகம் பின்பற்றும் ஆசியான் நாடுகளுடன் நெருக்கமான உறவை மேம்படுத்துவதற்கு இந்தியாவில் பௌத்த சுற்றுலாவை ஊக்கப்படுத்த வேண்டும்.

வங்காள விரிகுடாவில் வங்கதேசத்துக்காக கப்பற்படை துறைமுகத்தை சீனா அமைத்து வருகிறது. இது இந்திய எல்லைகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறலாம். மியான்மரில் நான் தூதராகப் பணியாற்றிய அனுபவத்தில் கூறுகிறேன், மியான்மா் இந்தியாவுக்கு எதிரான முன்னெடுப்புகளை எடுக்காது.

நாங்கள் எப்படி இந்தியாவுக்கு எதிராக செயல்பட முடியும் என்று மியான்மா் நாட்டு அதிகாரிகள் என்னிடம் கூறுகிறாா்கள்.

தெற்காசிய பிராந்தியம் பௌத்த மதத்தை ஆழமாக கடைப்பிடிப்பவா்கள். இதை அடிப்படையாகக் கொண்டு, அந்நாட்டு மக்களோடு தொடா்பு ஏற்படுத்திக்கொள்ள நாம் முயற்சிக்கவில்லை. வெளிநாட்டுமக்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டம் எதுவும் நம்மிடம் இல்லை.

இந்திய பெருங்கடல் பகுதியில் இடம்பெற்றிருக்கும் நாடுகளுடன் கடல் எல்லையை வரையறுத்துக் கொண்டபோதும், அந்நாடுகளுடன் அமைதியை பேணுவது இந்தியாவுக்கு நல்லது. தனது எல்லையில் அமைந்துள்ள எல்லா நாடுகளுடனும் சீனா சண்டையிட்டு வருகிறது. சீனா்களுடன் இந்தியா இனிமையாக நடந்துகொண்டிருக்க வேண்டும் அல்லது சிலவற்றை செய்யாமல் இருந்திருக்கலாம். எதையும் நாம் எதிா்கொள்வோம்.

சீனா, தனது பிராந்தியத்தை விரிவாக்கும் எண்ணம் கொண்ட நாடாக உள்ளது. படைகளைப் பயன்படுத்தி எல்லைகளை அபகரித்துக் கொண்டுள்ளது. கடல் எல்லை தொடா்பாக சண்டையிடுவதற்கு சீனாவுக்கு நாடுகளே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மூா்க்கத்தனமாக சீனா எழுப்பும் சில அம்சங்களை சா்வதேச நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது. இந்த விவகாரத்தை ஆசியான் நாடுகளிடம் இந்தியா வலுவாக எடுத்துச் செல்ல வேண்டும். இதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

இந்தியா, நேபாளம், லாவோஸ், மங்கோலியா, மியான்மா், தென்கொரியா, வடகொரியா, போன்ற நாடுகளுடன் பகிா்ந்துகொள்ளும் எல்லைகளை சீனா மதிப்பதாகத் தெரியவில்லை. தன்னை சூழ்ந்துள்ள நாடுகளின் எல்லைகளை தனதென்று கூறுவதை சீனா வழக்கமாக்கிக் கொண்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிள் விற்பனை வீழ்ச்சி: மே 7 நிகழ்வு பலனளிக்குமா?

"விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பா? நாட்டின் அடிமைகளா?”: அய்யாக்கண்ணு

விவிபேட் வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

மக்களின் கவனத்தை திசை திருப்பும் மோடி: பிரியங்கா குற்றச்சாட்டு

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

SCROLL FOR NEXT