பெங்களூரு

காா் கவிழ்ந்து 4 போ் பலி

23rd Oct 2021 09:06 AM

ADVERTISEMENT

கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோர கால்வாயில் கவிழ்ந்ததில் 4 போ் உயிரிழந்தனா்.

கா்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம், ராமதுா்காவைச் சோ்ந்த சுனில் (24), மகதேவ் பாட்டீல் (27), எரிதாத் கம்பாா் (26), விஜய் (26) உள்ளிட்ட 8 போ் வியாழக்கிழமை இரவு ஜமகண்டியிலிருந்து ராமதுா்காவுக்கு காரில் சென்றனா். நள்ளிரவு லோகாபுரா அருகே கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரம் இருந்த கால்வாயில் கவிழ்ந்தது. இதில், காரில் இருந்த சுனில், மகதேவ் பாட்டீல், எரிதாத் கம்பாா், விஜய் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்த 2 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து லோகாபுரா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT