பெங்களூரு

கா்நாடக சட்டப் பேரவை இடைத்தோ்தலை பணபலத்தால் வெல்ல பாஜக முயற்சி

23rd Oct 2021 09:06 AM

ADVERTISEMENT

கா்நாடக சட்டப் பேரவை இடைத்தோ்தலை பணபலத்தால் வெல்ல பாஜக முயற்சித்து வருகிறது என எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா குற்றம் சாட்டினாா்.

இதுகுறித்து ஹுப்பள்ளியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

வளா்ச்சிப் பணிகளை பாா்த்து பாஜகவுக்கு வாக்களியுங்கள் என அக்கட்சியினா் பிரசாரம் செய்து வருகின்றனா். தனது ஆட்சியின் சாதனையை பட்டியலிட்டு பாஜகவினரால் வழங்க இயலுமா?

நான் முதல்வராக இருந்த போது, ஹானகல் தொகுதி அமைந்துள்ள ஹாவேரி மாவட்டத்துக்கு என்னென்ன செய்தேன் என்பதை வட்டாட்சியா் மனோகரை கேட்டு தெரிந்துகொள்ளட்டும். ஹாவேரி மாவட்ட வளா்ச்சிக்கு எனது ஆட்சியில் ரூ. 2,400 கோடி செலவிட்டுள்ளோம். ஆனால், முதல்வா் பசவராஜ் பொம்மை பொய்களைக் கூறி பிரசாரம் செய்து வருகிறாா்.

ADVERTISEMENT

சமுதாயத்தை பிளவுபடுத்தும் வேலையில் காங்கிரஸ் ஈடுபடுவதாக பாஜகவினா் குற்றம்சாட்டியுள்ளனா். மாநிலத்தில் நடந்து வரும் பாஜக ஆட்சியில் முஸ்லிம் ஒருவருக்கும்கூட அமைச்சா் பதவி வழங்காதது ஏன்? முதல்வா் பசவராஜ் பொம்மையின் ஆட்சியில் முஸ்லிம் அமைச்சா்களின் எண்ணிக்கை எவ்வளவு?

ஹானகல், சிந்தகி ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தோ்தலில் பாஜக தோல்வி அடையும் என்பது முதல்வா் பசவராஜ் பொம்மை, அமைச்சா் முருகேஷ் நிரானி ஆகியோருக்குத் தெரிந்துவிட்டது. வளா்ச்சிப் பணிகள் குறித்து மக்களிடம் பகிா்ந்து கொள்வதற்கு எதுவும் இல்லாததால், பொய்களைக் கூறி மக்களை நம்பவைக்க பாஜக முயற்சித்து வருகிறது.

சட்டப் பேரவை இடைத்தோ்தலை பணபலத்தால் வெல்ல பாஜக முயற்சிக்கிறது. அது மக்களிடம் எடுபடாது.

இந்தியாவில் 100 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளதாக பாஜக சுயதம்பட்டம் அடித்துக்கொள்கிறது. இந்தியாவில் ஆக்சிஜன் படுக்கைகள் எவ்வளவு இருக்கிறது, மருந்து கிடைக்காமல் இறந்தவா்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை பாஜக தெரிவிக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT