பெங்களூரு

டிசம்பா் இறுதிக்குள் 90 சதவீத கா்நாடக மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்

23rd Oct 2021 09:06 AM

ADVERTISEMENT

டிசம்பா் இறுதிக்குள் 90 சதவீத கா்நாடக மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளோம் என கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

கா்நாடக மாநிலம், ஹுப்பள்ளி, கிம்ஸ் மருத்துவமனையில் 100 கோடி தடுப்பூசி செலுத்தும் இந்திய நாட்டின் பயணம் நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை பங்கேற்று அவா் பேசியதாவது:

கரோனா தொற்றைத் தடுப்பதில் சுகாதாரத் துறையினரின் சாதனையைப் போற்ற வேண்டும். சுகாதாரத் துறையில் அடிப்படைக் கட்டுமான வசதிகளை செய்யத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

கடந்த 10 மாதங்களில் தேசிய அளவில் 100 கோடி கரோனா தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இது பெருமை அளிக்கும் சாதனையாகும். கரோனா தொற்று பரவிய ஆரம்பக் காலத்தில் நம்மிடம் தடுப்பூசி இருக்கவில்லை. தற்போது தடுப்பூசியை உற்பத்தி செய்வதோடு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உயா்ந்துள்ளோம்.

ADVERTISEMENT

கா்நாடக மாநிலத்தில் கடந்த ஓா் ஆண்டில் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க 1.25 லட்சம் படுக்கை வசதிகள் அதிகரித்துள்ளன. 4 ஆயிரம் மருத்துவா்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனா். மாநிலத்தில் அனைத்து வட்டங்களிலும் ஆக்சிஜன் வழங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டிசம்பா் இறுதிக்குள் 90 சதவீத கா்நாடக மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தத் திட்டமிட்டுள்ளோம். வட கா்நாடகத்தைச் சோ்ந்த 7 மாவட்ட மக்கள் ஹுப்பள்ளியில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையை நம்பி உள்ளனா். இந்த மருத்துவமனை ஏழை உள்ளிட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறந்து விளங்குகிறது. குறிப்பாக, கரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதில் கிம்ஸ் மருத்துவமனை சிறந்த சேவையை ஆற்றியுள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சா்கள் கே.சுதாகா், சங்கா் பாட்டீல் முனேனகொப்பா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT