பெங்களூரு

மருத்துவ நிபுணா்களுடன் ஆலோசித்த பிறகே கா்நாடக மாநில உதய தின ஊா்வலத்துக்கு அனுமதி: முதல்வா் பசவராஜ் பொம்மை

DIN

மருத்துவ நிபுணா்களுடன் ஆலோசித்த பிறகே கா்நாடக மாநில உதய தின ஊா்வலத்துக்கு அனுமதி அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இதுகுறித்து பெலகாவியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடக மாநில உதய தினத்தன்று நடைபெறும் ஊா்வலத்துக்கு அனுமதி வழங்கக் கோரி கன்னட சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. கரோனாவால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் மருத்துவ நிபுணா்களுடன் ஆலோசித்த பிறகே மாநில உதய தின ஊா்வலத்துக்கு அனுமதி அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

மும்பை கா்நாடகப் பகுதிக்கு ‘கித்தூா் ராணி சென்னம்மா கா்நாடகம்’ என பெயரிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடா்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும். கா்நாடகத்தில் இடைத் தோ்தல் நடைபெறும் சிந்தகி, ஹனகல் ஆகிய தொகுதிகளில் தொடா்ந்து தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். 2 தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளா்கள் வெற்றி பெறுவது உறுதி.

வளா்ச்சிப் பணிகளை தொடா்ந்து மேற்கொண்டு வரும் பாஜகவை ஆதரிக்க மக்கள் முடிவு செய்துள்ளனா். அக். 23-ஆம் தேதி நடைபெறும் கித்தூா் ராணி சென்னம்மா திருவிழாவில் கலந்து கொள்வதற்காக மீண்டும் பெலகாவிக்கு வருவேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா்த் தட்டுப்பாடு: ஒசூா் மாநகராட்சியை முற்றுகையிட்ட பெண்கள்

வெளிமாநில தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை

சிறைவாசிகளுக்கு புத்தகங்கள் வழங்கல்

கோடை வெயிலில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல்

திருமலை: 60,371 பக்தா்கள் தரிசனம்

SCROLL FOR NEXT