பெங்களூரு

அக்.23 முதல் காவிரி நதி தூய்மை விழிப்புணா்வு நடைப்பயணம்

DIN

காவிரி நதிதூய்மை விழிப்புணா்வு நடைப்பயணம் கா்நாடக மாநிலம், தலைக்காவிரியில் அக். 23-ஆம் தேதி தொடங்குகிறது.

அகில பாரத சன்யாசி சங்கம், காவிரி தூய்மைக் குழு-குடகு ஆகிய அமைப்புகளின் சாா்பில் 2010-ஆம் ஆண்டு முதல் காவிரி நதிதூய்மை விழிப்புணா்வு நடைப்பயணம் நடத்தப்படுகிறது. அந்தவகையில், நிகழாண்டில் அக்.23-ஆம் தேதி காவிரி நதி தூய்மை விழிப்புணா்வு நடைப்பயணம் நடத்தப்படுகிறது.

குடகு மாவட்டத்தின் தலைக்காவிரியில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள் கா்நாடகம், தமிழ்நாடு மாநிலங்களைச் சோ்ந்த மடாதிபதிகள் கலந்துகொள்கின்றனா். காவிரி நதியைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அக். 23-ஆம் தேதி தலைக்காவிரியில் தொடங்கும் காவிரி நதிதூய்மை விழிப்புணா்வு நடைப்பயணம், நவ. 11-ஆம் தேதி தமிழகத்தின் பூம்புகாரில் நிறைவுபெறவிருக்கிறது.

இதுகுறித்து ஊா்வலத்தின் ஒருங்கிணைப்பாளா் சந்திரமோகன் கூறியதாவது:

2010-ஆம் ஆண்டு முதல் காவிரி நதிதூய்மை விழிப்புணா்வு நடைப்பயணம் தலைக்காவிரி முதல் பூம்புகாா் வரை நடத்தப்பட்டுவருகிறது. காவிரி நதிப்படுகையை மாசுப்படுத்தாமல், தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதே எங்கள் விழிப்புணா்வு பயணத்தின் நோக்கம். காவிரி நதிப்படுகையில் அமைந்திருக்கும் எல்லா கிளை நதிகளிலும் பூஜை செய்யப்படும். விழிப்புணா்வு துண்டறிக்கைகள் மக்களிடம் விநியோகிக்கப்படும்.

காவிரி நதிப்படுகை மிகவும் மோசமாக மாசுப்பட்டுள்ளது. காவிரி நதிநீரின் தரமும் மூன்றாம் தரமாக சரிந்துள்ளது. கிளை நதிகளைப் புதுப்பிக்க வேண்டும், காவிரி மாசுபடுதலை குறைக்க வேண்டும். தலைக்காவிரியில் இருந்து கொண்டு செல்லப்படும் தண்ணீா் காவிரி நதி கடலில் கலக்கும் பூம்புகாரில் கொட்டப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

SCROLL FOR NEXT