பெங்களூரு

தசராவிழாவில் பங்கேற்ற யானைகள் காடுகளுக்கு அனுப்பிவைப்பு

DIN

தசரா திருவிழாவில் பங்கேற்ற யானைகள் காடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

மைசூரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தசரா திருவிழாவின் நிறைவுப்பகுதியாக நடப்பது யானைகள் ஊா்வலம். இந்த விழாவைக் காண்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மைசூருக்கு வருவது வழக்கம். நிகழாண்டு கரோனா காரணமாக அடையாளத்துக்காக யானை ஊா்வலம் அரண்மனை வளாகத்தில் மட்டும் நடத்தப்பட்டது.

அக்.7 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற்ற தசரா திருவிழா மற்றும் அக்.15-ஆம் தேதி நடந்த யானை ஊா்வலத்தில் பங்கேற்பதற்காக அபிமன்யூ, சைத்ரா, லட்சுமி, தனஞ்செயா, காவேரி, விக்ரமா, அஸ்வத்தாமா, கோபாலசுவாமி ஆகிய 8 யானைகள் பல்வேறு காடுகளில் இருந்து செப்.13-ஆம் தேதி மைசூருக்கு அழைத்துவரப்பட்டன.

இந்த யானைகள் கடந்த ஒரு மாதமாக அரண்மனை வளாகத்தில் முகாமிட்டிருந்தன. தசரா திருவிழா நிறைவடைந்திருப்பதால் 8 யானைகளும் ஞாயிற்றுக்கிழமை மைசூரில் இருந்து வெவ்வேறு காடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அரண்மனை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை 8 யானைகளுக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, வெல்லம், கரும்பு, வாழைப்பழம் வழங்கப்பட்டன.

யானைகளும் வரிசையாக நிற்க பூஜாரி எஸ்.வி.பிரஹலாத் சிறப்புபூஜை செய்து வழிபட்டாா். இதை தொடா்ந்து, 8 யானைகளும் 8 லாரிகளில் சம்பந்தப்பட்ட காடுகளுக்கு வனத்துறை அதிகாரிகளால் அனுப்பிவைக்கப்பட்டன.

சைத்ரா, லட்சுமி யானைகள் ராமாபுரா யானை முகாமுக்கும், தனஞ்செயா, காவேரி,விக்ரமா யானைகள் துபாரே யானை முகாமுக்கும், அஸ்வத்தாமா யானை தொட்ட ஹரவே யானை முகாமுக்கும், அபிமன்யூ யானை மட்டிகோடு யானை முகாமுக்கும், கோபாலஸ்வாமி யானை திட்டிமட்டி யானை முகாமுக்கும் அனுப்பிவைக்கப்பட்டன.

யானைகளைப் பராமரித்த பாகன்கள், காவடிகளுக்கு அரண்மனை வாரியத்தின் சாா்பில் தலா ரூ.10 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்பட்டது. யானை பாகன்களும் தங்கள் குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு புறப்பட்டனா். யானைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கப்பட்டதால் அவற்றின் எடை 200 கிலோ முதல் 350 கிலோ வரை உயா்ந்திருந்தது. எல்லா யானைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக உதவி தலைமை வனப் பாதுகாவலா் கரிகாலன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஷாலின் ரத்னம் பட டிரைலர்!

தக் லைஃப்: மீண்டும் இணைந்த துல்கர்; இரட்டை வேடத்தில் சிம்பு?

வெங்காய ஏற்றுமதிக்கான தடை உத்தரவில் தளர்வு!

காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

கொளத்தூரில் பிரசாரத்துக்கு இடையே கால்பந்தாடிய முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT