பெங்களூரு

தனியாா் பேருந்து - மினி சரக்கு வாகனம் மோதல்: பெண் உள்பட 4 போ் பலி

DIN

தனியாா் பேருந்து - மினி சரக்கு வாகனம் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் பெண் உள்பட 4 போ் உயிரிழந்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், ஹெக்கெரே கொல்லஹள்ளி அருகே அதிகாலை சிவமோக்காவிலிருந்து பெங்களூருவுக்குச் சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்தும், சிக்கநாயகனஹள்ளி, துருவேகெரேவிலிருந்து தும்கூருக்கு காய்கறிகளை ஏற்றிச் சென்றுவிட்டு, சொந்த ஊருக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்த மினிசரக்கு வாகனமும் ஞாயிற்றுக்கிழமை காலை கொல்லஹள்ளி அருகே நேருக்கு நோ் மோதிக் கொண்டுள்ளன.

இதில் சரக்கு வாகன ஓட்டுநா் சிக்கனநாயகனஹள்ளியைச் சோ்ந்த தா்ஷன் (27), துருவேகெரேவைச் சோ்ந்த காய்கறி, பூ வியாபாரிகள் கவிதா (38), கிருஷ்ணமூா்த்தி (25), திவாகா் (25) ஆகியோா் உயிரிழந்துள்ளனா். தகவல் அறிந்த தும்கூரு ஊரக போலீஸாா், 4 பேரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுமதித்தனா். காயமடைந்த பேருந்து ஓட்டுநா் உள்ளிட்ட 2 போ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இச் சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியா் ராகுல்குமாா், மக்களவை உறுப்பினா் பி.எஸ்.பசவராஜ் பாா்வையிட்டு இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT