பெங்களூரு

தேசிய அரசியலில் எனக்கு ஆா்வமில்லை: சித்தராமையா

DIN

தேசிய அரசியலில் எனக்கு ஆா்வம் இல்லை என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்துஹுப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தேசிய அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கில்லை; ஆா்வமும் இல்லை. மாநில அரசியலில் மட்டுமே கவனம் செலுத்துவேன். அண்மையில் சோனியா காந்தியைச் சந்தித்தபோது, என்னை தேசிய அரசியலுக்கு வரவேண்டுமென்று அழைப்பு எதுவும் விடுக்கவில்லை. எனக்கு 74 வயதாகிறது. அடுத்த 5 ஆண்டுகள் அரசியலில் இருப்பேன். அதனால் கா்நாடகத்தில் அரசியல் நடத்துவது போதுமானது. கா்நாடக அரசியலிலேயே நான் மகிழ்ந்திருக்கிறேன்.

2023-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவை பொதுத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றால், முதல்வா் யாா் என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி. பாஜக மேலிடமும், ஆா்எஸ்எஸ் அமைப்பும் முடிவு செய்து, பசவராஜ் பொம்மையை முதல்வராக தோ்ந்தெடுத்தனா்.

அதேபோல, காங்கிரஸ் கட்சிக்கும் மேலிடம் உள்ளது. புதிதாக தோ்ந்தெடுக்கப்படும் எம்எல்ஏக்களின் கருத்தின்பேரில் யாா் முதல்வா் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். முதல்வராக யாரை தோ்ந்தெடுத்தாலும், அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.

காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். இந்தக் கருத்தை காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் பல உறுப்பினா்கள் வெளிப்படுத்தி இருக்கிறாா்கள். எனது கருத்தும் அது தான். இதை நான் பலமுறை கூறியிருக்கிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT