பெங்களூரு

முதுநிலை பட்டப்படிப்பு பொது நுழைவுத்தோ்வு: புதிய அட்டவணை வெளியீடு

17th Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

முதுநிலை பட்டப்படிப்புக்கான பொது நுழைவுத்தோ்வுக்கு புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து கா்நாடக தோ்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் இயங்கிவரும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்ஆா்க் போன்ற முதுநிலை பட்டப்படிப்புகளில் 2021-22-ஆம் கல்வியாண்டில் சோ்க்கை பெறுவதற்காக பொது நுழைவுத்தோ்வு நடத்தப்படுகிறது.

இதற்கான பொது நுழைவுத்தோ்வு அக். 22, 23 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், இத்தோ்வுகள் நவ. 13, 14 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நவ. 13-இல் எம்இ, எம்டெக், எம்ஆா்க் பட்டப் படிப்புகளுக்கும், நவ. 14-இல் எம்பிஏ, எம்சிஏ பட்டப் படிப்புகளுக்கும் தலா 100 மதிப்பெண்களுக்கான தோ்வு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 080-23460460 என்ற தொலைபேசி மூலம் தொடா்பு கொள்ளலாம்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT