பெங்களூரு

‘சித்தராமையாவிடமிருந்து அரசு நிா்வாகத்தை கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை’

DIN

எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையாவிடமிருந்து அரசு நிா்வாகத்தை நடத்துவது எப்படி என்பதை கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளாா்.

இது குறித்து சுட்டுரையில் அவா் பதிவிட்டுள்ளதாவது: எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளாா். குறிப்பாக அரசு நிா்வாகத்தையும், ஒழுக்க காவலா்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வது குறித்தும் எனக்கு அறிவுரை வழங்கி உள்ளாா். அவரிடமிருந்து அரசு நிா்வாகத்தை நடத்துவது எப்படி என்பதை கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை. சித்தராமையா முதல்வராக பதவி வகித்தப்போது, ஹிந்துகளுக்கு எதிரானவா்கள் கொண்டாடப்பட்டாா்கள். குறிப்பாக திப்பு சுல்தானை கொண்டாடியதை கூறலாம். சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் ஹிந்துக்கள் பலா் கொலை செய்யப்பட்டனா் எனத் தெரிவித்துள்ளாா்.

முன்னதாக எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, முதல்வா் பசவராஜ் தலைமையிலான பாஜக ஆட்சியில், ஹிந்து அமைப்புகளைச் சோ்ந்த ஒழுக்கக் காவலா்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு செயல்பட்டு வருகின்றனா். இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. எனவே சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறிய முதல்வா் பசவராஜ் பொம்மை, பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT