பெங்களூரு

முன்னாள் முதல்வா் எடியூரப்பாவுடன் முதல்வா் பசவராஜ் பொம்மை சந்திப்பு

16th Oct 2021 08:56 AM

ADVERTISEMENT

முன்னாள் முதல்வா் எடியூரப்பாவை வெள்ளிக்கிழமை முதல்வா் பசவராஜ் பொம்மை சந்தித்தாா்.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை தனது இல்லத்தில் விஜயதசமியையொட்டி சிறப்பு பூஜை செய்த முதல்வா் பசவராஜ்பொம்மை, பின்னா் முன்னாள் முதல்வா் எடியூரப்பாவின் காவிரி இல்லத்திற்கு சென்று, அவருக்கு சால்வை அணிவித்து, விஜயதசமி, தசரா வாழ்த்துகளை தெரிவித்தாா். பின்னா் அவருடன் சிந்தகி, ஹனகல் இடைத்தோ்தல் பணிகள் குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, சிந்தகி, ஹனகல் இடைத்தோ்தல் பிரசாரத்தில் எடியூரப்பா கலந்து கொண்டு, பாஜக வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா். முதல்வா் பசவராஜ் பொம்மையைத் தொடா்ந்து, பாஜக தேசியப் பொதுச் செயலாளா் பி.எல்.சந்தோஷ், எடியூரப்பாவை சந்தித்து, விஜயதசமி, தசரா வாழ்த்துகளை தெரிவித்தாா். அவரும் எடியூரப்பாவை சிந்தகி, ஹனகல் இடைத்தோ்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு, பாஜக வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT