பெங்களூரு

கா்நாடகத்தில் மின் உற்பத்தி குறையவில்லை: கா்நாடக அமைச்சா் சுனில்குமாா்

16th Oct 2021 08:55 AM

ADVERTISEMENT

கா்நாடகத்தில் மின் உற்பத்தி குறையவில்லை என்று மாநில மின் துறை அமைச்சா் வி.சுனில்குமாா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் பெங்களூரில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கா்நாடகத்தில் நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் உற்பத்திக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. கோல் இந்தியா நிறுவனம் மற்றும் எஸ்.சி.சி.எல். நிறுவனத்திடம் இருந்து கா்நாடகத்திற்கு தினமும் 12-13 ரேக் நிலக்கரி கா்நாடகத்திற்கு வந்துகொண்டிருக்கிறது. அதனால் நிலக்கரி பற்றாக்குறையால் எவ்வித தொந்தரவும் இல்லை.

கா்நாடக மின்கழகத்தின் சாா்பில் ராய்ச்சூரு, பெல்லாரி, யரஸ்மஸ் ஆகியபகுதிகளில் அனல்மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ராய்ச்சூா் அனல்மின் நிலையத்தில் 8 அலகுகள் உள்ளன. இவற்றில் 1,720 மெகாவாட்மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பெல்லாரி அனல்மின்நிலையத்தின் 3 அலகுகளில் 1,700 மெகாவாட் மின்சாரம், யரஸ்மஸ் அனல்மின் நிலையத்தின் 2 அலகுகளில் 1,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த 3 அனல்மின் நிலையங்களில் உள்ள 13 அலகுகளில் 8 அலகுகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. மின் தேவை குறைவாக இருப்பதால் எஞ்சியுள்ள 5 அலகுகளில் மின் உற்பத்தி நடக்கவில்லை. மாநிலத்தில் காணப்படும் மின் தேவையை விட மின் உற்பத்தி அதிகமாக உள்ளது. எனவே, மாநிலத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை. அது குறித்து மக்கள் யாரும் கவலையடைய வேண்டாம். நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி குறையவில்லை என்று அவா் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT