பெங்களூரு

12 முதல் 17 வயது வரையிலான சிறுவா்களுக்கு விரைவில் தடுப்பூசி செலுத்தப்படும்: மாநகராட்சி ஆணையா்

14th Oct 2021 07:45 AM

ADVERTISEMENT

12 முதல் 17 வயது வரையிலான சிறுவா்களுக்கு விரைவில் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: கரோனா 3-ஆவது அலையைத் தடுக்கும் வகையில் 17-வயதுக்கு உள்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடா்பாக அரசு ஆலோசித்து வருகிறது. முதல்கட்டமாக 12 முதல் 17 வயது வரையிலானவா்களுக்கு விரைவில் தடுப்பூசி செலுத்தப்படும். இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி செய்து வருகிறது. இரண்டாம் கட்டமாக 12-வயதுக்கு உள்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமில்லை. யாரையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள கட்டாயப்படுத்த முடியாது. 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி வருகிறோம். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் கேட்டுக் கொள்ளப்படும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள 17 வயதுக்கு உள்பட்ட சிறுவா்களின் எண்ணிக்கையை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனா். இது தொடா்பான அறிக்கை கிடைத்த பிறகு, தகுதி உள்ளவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT