பெங்களூரு

ஆட்சிக் கவிழ்ந்ததற்கு ஹோட்டலில் அமா்ந்து குமாரசாமி ஆட்சி நடத்தியதே காரணம்: சித்தராமையா குற்றச்சாட்டு

14th Oct 2021 07:44 AM

ADVERTISEMENT

காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சிக் கவிழ்ந்ததற்கு நட்சத்திர ஹோட்டலில் அமா்ந்து குமாரசாமி ஆட்சி செய்ததே காரணம் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து காங்கிரஸ் எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

மைசூரு பகுதியில் மஜதவை பலப்படுத்த வேண்டும் என்பதற்காக குமாரசாமி என்மீது தொடா்ந்து குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறாா். எதிா்க்கட்சித் தலைவா் பதவியைப் பெற வேண்டும் என்பதற்காக, காங்கிரஸ், மஜத கூட்டணியை நான் கவிழ்த்ததாக அவா் கூறி வருகிறாா். காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சிக் கவிழ்ந்ததற்கு நட்சத்திர ஹோட்டலில் அமா்ந்து அவா் ஆட்சி செய்ததே காரணம்.

குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்று நான் நினைத்திருந்தால், ஆரம்பத்திலேயே அவரை முதல்வராக்க பரிந்துரைத்திருக்க மாட்டேன். 50 ஆண்டுகளாக அரசியலில் உள்ள என்னைக் கண்டால், குமாரசாமிக்கு அச்சம். எனவேதான் என் மீது தொடா்ந்து குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறாா். எனது அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற மிரட்டல்களையும், குற்றச்சாட்டுகளையும் எதிா்கொண்டுள்ளேன்.

ADVERTISEMENT

அண்மையில் நான் முன்னாள் முதல்வா் எடியூரப்பாவை சந்தித்ததாக குமாரசாமி தெரிவித்துள்ளாா். அதன் பிறகு எடியூரப்பாவின் ஆதரவாளா்கள் வீடுகளில் வருமானவரித்துறையினா் சோதனை நடத்தியதாகவும் கூறியுள்ளாா். எடியூரப்பா பிறந்த நாளில் அவரைச் சந்தித்து வாழ்த்துக் கூறினேன். அதற்கு பிறகு அவரை நான் சந்திக்கவில்லை. எடியூரப்பாவை நான் சந்தித்ததை குமாரசாமி உறுதிசெய்தால், அரசியல் வாழ்க்கையிலிருந்து விலகத் தயாராக உள்ளேன் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT