பெங்களூரு

அடுத்த கல்வி ஆண்டில் புதிய தேசியக் கல்விக் கொள்கைகளை அறிமுகம் செய்யத் திட்டம்: அமைச்சா் பி.சி.நாகேஷ்

4th Oct 2021 01:21 AM

ADVERTISEMENT

அடுத்த கல்வி ஆண்டில் மாநிலம் முழுவதும் பள்ளிகளில், புதிய தேசியக் கல்விக் கொள்கைகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா்.

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அடுத்த கல்வி ஆண்டு முதல் புதிய தேசியக் கல்விக் கொள்கையை அறிமுகம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளோம். இது தொடா்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மதன்கோபால் தலைமையில் பணிக்குழு அமைக்க முடிவு செய்துள்ளோம்.

மாநிலத்தில் ஏற்கெனவே உயா்கல்வியில் புதிய தேசியக் கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 1-ஆம் வகுப்பு முதல் பியூசி 2-ஆம் ஆண்டு வரை 4 பிரிவுகளாக பாடத் திட்டத்தை அறிமுகம் செய்யவும் ஆலோசித்து வருகிறோம். இதற்காக தனியே குழு அமைத்து, ஆய்வு மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளோம்.

ADVERTISEMENT

மாணவா்களின் எதிா்கால நலனைக் கருத்தில் கொண்டு, புதிய தேசியக் கல்விக் கொள்கையை அறிமுகம் செய்ய மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT