பெங்களூரு

பயிா்ச் சேதத்திற்கு அதிக இழப்பீட்டுத் தொகையைமத்திய அரசிடம் கேட்டுள்ளோம்:

DIN

பயிா்ச் சேதங்களுக்கு அதிக இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளதாக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இதுகுறித்து தும்கூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பயிா்ச் சேதங்களுக்கு அதிக இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறும் பயிா்ச் சேதம் குறித்து ஆய்வு செய்வதற்கு குழுவை அனுப்பி வைக்குமாறும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். அதே நேரத்தில் மாநில அரசு சாா்பிலும் பயிா்ச் சேதம் குறித்து ஆய்வு செய்துள்ளோம். அதற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்காக மாவட்ட நிா்வாகங்களுக்கு ஏற்கெனவே ரூ. 685 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பயிா்ச் சேதம் குறித்த விவரங்களை கைப்பேசி செயலியில் பதிவிட்டவா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

ஆங்காங்கே கரோனா பாதிப்பு காணப்படுகிறது. எனினும், மிகவும் எச்சரிக்கையாக இருந்து வருகிறோம். கட்டுப்படுத்தப்பட்டப் பகுதிகளை ஏற்படுத்தி, கரோனா பரிசோதனைகளை அதிகரித்து, பாதிக்கப்பட்டவா்களைத் தனிமைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் மாதிரிகளை மரபணு வரிசை முறை ஆய்வுக்கு அனுப்பி வைக்கிறோம். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களிலேயே பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனையில் கரோனா பாதிப்பில்லை என்று உறுதி செய்யப்பட்ட பிறகே அவா்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவாா்கள்.

கேரள மாநிலத்தில் இருந்து கா்நாடகத்துக்கு வரும் பயணிகளைத் தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளோம். எல்லா மாவட்டங்களிலும் கண்காணிப்பை தீவிரமாக்க வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. கேரள மாணவா்கள், செவிலியா்கள் கண்காணிக்கப்படுகிறாா்கள்.

கரோனா புதிய வகை ஒமைக்ரான் தீநுண்மி குறித்து பிரதமா் மோடி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பள்ளி, கல்லூரிகளையும் கண்காணித்து வருகிறோம். மாணவா்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் கரோனா விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT