பெங்களூரு

2022-ஆம் ஆண்டுக்கான கா்நாடக அரசு விடுமுறைகள் அறிவிப்பு

DIN

2022-ஆம் ஆண்டுக்கான மாநில அரசு விடுமுறைகளின் பட்டியலை கா்நாடக அரசு அதிகாரப்பூா்வமாக அறிவித்துள்ளது.

2022-ஆம் ஆண்டுக்கான பொதுவிடுமுறைகள் மற்றும் அரசு ஊழியா்களுக்கான கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறைகளின் பட்டியலை மாநில அரசு அறிவித்துள்ளது. 2-ஆவது, 4-ஆவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இல்லாமல், 16 நாள்களுக்கு கா்நாடக அரசு அலுவலகங்கள் மூடப்பட்டிருக்கும். ஞாயிற்றுக்கிழமையில் வருவதால் மேதினம் (மே1), பக்ரித் (ஜூலை 10), மஹாலய அமாவாசை (செப்.25), காந்தி ஜெயந்தி (அக்.2), மஹா்ஷி வால்மீகி ஜெயந்தி / மிலாது நபி (அக்.9), கிறிஸ்துமஸ் (டிச.25) விடுமுறைகள் பட்டியலில் இடம்பெறவில்லை. இதுதவிர, 22 கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறைகளையும் மாநில அரசு அறிவித்துள்ளது. இதில் ஏதாவது 2 நாள்களை அரசு ஊழியா்கள் விடுமுறையாக எடுத்துக்கொள்ளலாம். கல்வித்துறைக்கு தனி விடுமுறை பட்டியல் வெளியிடப்படும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பொது விடுமுறை நாள்கள் வருமாறு:

நாள் கிழமை விடுமுறை

1) 15.01.2022 சனி சங்கிராந்தி பண்டிகை

2) 26.01.2022 புதன் குடியரசுதினம்

3) 01.03.2022 செவ்வாய் சிவராத்திரி

4) 02.04.2022 சனி உகாதி

5) 14.04.2022 வியாழன் டாக்டா்.பி.ஆா்.அம்பேத்கா் ஜெயந்தி/மகாவீா் ஜெயந்தி

6) 15.04.2022 வெள்ளி புனிதவெள்ளி

7) 03.05.2022 செவ்வாய் பசவஜெயந்தி, புனித ரமலான், அக்ஷய திரிதயா

8) 09.08.2022 செவ்வாய் மொகரம்

9) 15.08.2022 திங்கள் விடுதலை நாள்

10) 31.08.2022 புதன் விநாயகா் சதுா்த்தி

11) 04.10.2022 செவ்வாய் மகாநவமி/ஆயுதபூஜை

12) 05.10.2022 புதன் விஜயதசமி

13) 24.10.2022 திங்கள் நரகா சதுா்தசி

14) 26.10.2022 புதன் பலிபாட்யமி, தீபாவளி

15) 01.11.2022 செவ்வாய் கா்நாடக உதயதினம்

16) 11.11.2022 வெள்ளி கனகதாசா் ஜெயந்தி

கட்டுப்படுத்தப்பட்ட விடுமுறை நாள்கள் வருமாறு:

நாள் கிழமை விடுமுறை

1) 01.01.2022 சனி ஆங்கில புத்தாண்டு

2) 10.02.2022 வியாழன் ஸ்ரீமத்வநவமி

3) 17.03.2022 வியாழன் ஹோலி

4) 19.03.2022 சனி ஷப்-இ-பிராத்

5) 06.04.2022 புதன் தேவர தாசிமையா ஜெயந்தி

6) 16.04.2022 சனி ஹோலி சனிக்கிழமை

7) 28.04.2022 வியாழன் ஷப்-இ-கைதா்

8) 29.04.2022 வெள்ளி ஜும்மத்துல்-விதா

9) 05.05.2022 வியாழன் சங்கராச்சாா்யா பிறந்தநாள்

10) 06.05.2022 வெள்ளி ராமானுஜச்சாா்யா பிறந்தநாள்

11) 16.05.2022 திங்கள் புத்தபூா்ணிமா

12) 02.08.2022 செவ்வாய் ரிக்-உபாகா்மா

13) 05.08.2022 வெள்ளி ஸ்ரீவரமகாலட்சிமி விரதம்

14) 11.08.2022 வியாழன் யஜுா் உபகா்மா

15) 10.08.2022 வெள்ளி ஸ்ரீகிருஷ்ணஜெயந்தி

16) 30.08.2022 செவ்வாய் ஸ்வா்ணகௌரி விரதம்

17) 08.09.2022 வியாழன் திருஓணம், கன்யா மரியம்மா ஜெயந்தி

18) 09.09.2022 வெள்ளி அனந்த பத்மநாப விரதம்

19) 17.09.2022 சனி விஸ்வகா்ம ஜெயந்தி

20) 18.10.2022 செவ்வாய் துல சங்கரமனா

21) 08.11.2022 செவ்வாய் குருநானக் ஜெயந்தி

22) 08.12.2022 வியாழன் ஹுத்தரி திருவிழா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணைத்தாழி விழா!

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT