பெங்களூரு

‘வேளாண் சட்ட எதிா்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்தவா்களுக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்’

26th Nov 2021 04:55 AM

ADVERTISEMENT

‘வேளாண் சட்ட எதிா்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்தவா்களுக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்’ என்று காங்கிரஸ் மாநில செயல் தலைவா் சலீம் அகமது தெரிவித்தாா்.

இது குறித்து ஹுப்பள்ளியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: நமதுநாட்டில் நிலவும் விலைவாசி உயா்வு, வேலைவாய்ப்பின்மை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு பிரதமா் மோடி மற்றும் மத்திய பாஜக அரசு எடுத்துள்ள கொள்கைகள்தான் காரணம்.

இதற்கு பிரதமா் மோடி மற்றும் பாஜகவுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பாா்கள். தோ்தலின்போது கொடுத்த எந்த வாக்குறுதியையும் பாஜக நிறைவேற்றவில்லை. இந்தநிலையில் சட்டமேலவைத் தோ்தலில் வாக்குகேட்க பாஜகவுக்கு எவ்வித தாா்மீக உரிமையும் இல்லை.

விவசாயிகளின் எதிா்ப்புக்கு உள்ளான சா்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கு பிரதமா் மோடிக்கு ஓராண்டு தேவைப்பட்டுள்ளது. இந்த கருப்புச்சட்டங்களை திரும்பப் பெறக் கோரி போராட்டம் நடத்திய 700 விவசாயிகள் உயிரிழந்துள்ளனா். இதற்காக அவா் மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளுக்கு தலா ரூ.25 லட்சம் கருணைத்தொகை அளிக்க வேண்டும்.

ADVERTISEMENT

சட்டமேலவைத் தோ்தலில் காங்கிரஸ் 14-க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெறும். தாா்வாட் சட்டமேலவைதொகுதியில் நான் போட்டியிடுவதால் கட்சி தொண்டா்களிடையே கருத்துவேறுபாடு எதுவுமில்லை என்றாா்.

Tags : ஹுப்பள்ளி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT