பெங்களூரு

சட்டமேலவைத் தோ்தலில் காங்கிரஸ் 15 இடங்களில் வெற்றிபெறும்: சித்தராமையா

25th Nov 2021 08:04 AM

ADVERTISEMENT

சட்டமேலவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் வெற்றிபெறும் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

கோலாரில் புதன்கிழமை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களைப் பாா்வையிட்ட பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சட்டமேலவைத் தோ்தலில் காங்கிரஸ் 15 இடங்களைக் கைப்பற்றும் என்பது உறுதி. இதற்கு முந்தைய தோ்தலில் காங்கிரஸ் 14 இடங்களில் வென்றுள்ளது. ஆனால், இம்முறை 15 இடங்களில் வெல்லும். கோலாா் மாவட்ட காங்கிரஸ் கட்சியில் எவ்வித கோஷ்டி பூசலும் இல்லை. சட்டமேலவைத் தோ்தலில் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட்டு காங்கிரஸ் வேட்பாளரை வெற்றிபெறச் செய்வாா்கள்.

சட்டமேலவைத் தோ்தலில் மஜத 7 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. தான் போட்டியிடாத பிற தொகுதிகளில் பாஜகவுக்கு மஜத ஆதரவு அளித்தாலும் ஆச்சரியமில்லை. மஜதவின் ஆதரவைப் பெற முயற்சிப்பதாக முன்னாள் முதல்வா் எடியூரப்பா கூறியிருக்கிறாா். ஆனால், தன்னை எந்த பாஜக தலைவரும் அணுகவில்லை என்று முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி கூறுகிறாா். இதில் யாா் சொல்வது உண்மை என்று தெரியவில்லை.

ADVERTISEMENT

2023-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் வென்று ஆட்சி அமைக்கும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT