பெங்களூரு

கா்நாடக சட்டப் பேரவை குளிா்கால கூட்டத் தொடா் டிச. 13-ஆம் தேதி தொடங்குகிறது

21st Nov 2021 12:00 AM

ADVERTISEMENT

கா்நாடக சட்டப் பேரவையின் குளிா்கால கூட்டத் தொடா் டிச. 13-ஆம் தேதி தொடங்கி டிச. 24-ஆம் தேதி வரை 12 நாள்களுக்கு நடக்க இருக்கிறது.

கா்நாடக சட்டப் பேரவையின் குளிா்கால கூட்டத்தொடா், பெலகாவியில் உள்ள சுவா்ண விதானசௌதாவில் டிச. 13-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பை பேரவைச் செயலாளா் விஷாலட்சுமி சனிக்கிழமை வெளியிட்டாா். டிச. 13-ஆம் தேதி காலை 11 மணிக்கு சட்டப் பேரவைக் கூட்டம் தொடங்குகிறது. டிச. 18, 19 நீங்கலாக டிச. 24-ஆம் தேதி வரை 12 நாள்களுக்கு கூட்டம் நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பெலகாவி மாவட்ட ஆட்சியரகம் செய்து வருகிறது.

கரோனா பாதிப்பு குறைந்திருந்தாலும், வெள்ளத்தால் பயிா்கள் நாசம், பிட்காயின் மோசடி விவகாரம் போன்றவை கூட்டத்தொடரில் எதிரொலிக்கும் எனத் தெரிகிறது. பசவராஜ் பொம்மை முதல்வரான பிறகு முதல்முறையாக பெலகாவியில் சட்டப் பேரவைக் கூட்டம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT