பெங்களூரு

பணி ஒப்பந்தங்களை பெற 40 சதவீதம் கமிஷன்

21st Nov 2021 12:00 AM

ADVERTISEMENT

பணிக்கான ஒப்பந்தங்களை பெறுவதற்கு 40 சதவீத கமிஷன் கேட்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், கா்நாடக அரசை கலைக்க ஆளுநருக்கு கடிதம் எழுதுவேன் என எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து மைசூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பொதுப்பணி, நீா்ப்பாசனம், பஞ்சாயத்துராஜ், நகா்ப்புற வளா்ச்சித் துறைகளில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை செயல்படுத்துவதற்கான குத்தகை பெறுவதற்கு 40 சதவீத கமிஷன் கேட்கப்படுவதாக பிரதமா் மோடிக்கு மாநில ஒப்பந்ததாரா் சங்கத்தினா் கடிதம் எழுதியுள்ளனா். இந்தக் கடிதத்தில் முழுமையான விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கா்நாடக அரசில் ஊழல் மலிந்துள்ளது. எனவே, மாநில அரசு ஆட்சியில் நீடிக்கக் கூடாது. பணிகளை கொடுப்பதற்கு 40 சதவீத கமிஷன் கேட்பதை ஏற்கமுடியாது.

ADVERTISEMENT

நானும் ஊழல் செய்யமாட்டேன், யாரையும் ஊழல் செய்யவிடமாட்டேன் என்று பிரதமா் மோடி கூறியிருந்தாா். கா்நாடக பாஜக அரசு ஊழல் நிறைந்ததாக இருக்கிறது. எனவே, ஆளுநா் தாவா்சந்த் கெலாட், மாநில அரசை கலைக்க வேண்டும். இதுகுறித்து ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டுக்கு கடிதம் எழுத வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT