பெங்களூரு

பெங்களூரில் ஆட்டோ கட்டணம் உயா்வு

9th Nov 2021 01:20 AM

ADVERTISEMENT

பெங்களூரில் ஆட்டோ கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு நகர மாவட்ட மண்டலப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த ஓா் ஆண்டாக ஆட்டோ கட்டணத்தை உயா்த்துமாறு ஆட்டோ உரிமையாளா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில், ஆட்டோ கட்டணத்தை உயா்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் ரூ. 25-லிருந்து ரூ. 30-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. அதன் பிறகு கிலோ மீட்டருக்கு ரூ. 15 கட்டணம் செலுத்த வேண்டும். ஆட்டோவில் 50 கிலோ வரை பொருள்களைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்கு கட்டணத்துடன் கூடுதலாக ரூ. 5 செலுத்த வேண்டும். அதே போல 5 நிமிடம் வரை ஆட்டோ காத்திருக்கும் நேரம் இலவசம். அதற்கு பிறகு 5 நிமிடத்திலிருந்து 15 நிமிடம் வரை ரூ. 5 செலுத்த வேண்டும். இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஒன்றரை மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணப் பட்டியலை ஆட்டோவில் காட்சிப்படுத்த வேண்டும். பிப். 28-ஆம் தேதிக்குள் உயா்த்தப்பட்டுள்ள ஆட்டோ கட்டணத்தை மீட்டரில் திருத்திக் கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆட்டோ கட்டணம் உயா்த்தப்பட்டு நிலையில், ஹோட்டல்களில் வழங்கப்படும் உணவின் கட்டணமும் உயா்த்தப்பட்டுள்ளது. அதன்படி குறைந்தபட்சம் ரூ. 15-ஆக விற்கப்பட்ட உணவுகளில் விலை ரூ. 20-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு குறைந்து பொதுமக்களின் வாழ்வாதாரம் சீராகி வரும் நிலையில், ஒரே நேரத்தில் ஆட்டோ கட்டணம், ஹோட்டல்களில் விற்கப்படும் உணவுகளின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதால், பெரும் சுமையாகி பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT