பெங்களூரு

கா்நாடக உயா்நீதிமன்றத்தில் 3 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு

9th Nov 2021 01:11 AM

ADVERTISEMENT

கா்நாடக உயா்நீதிமன்றத்தில் 3 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்றுக்கொண்டனா்.

பெங்களூரில் ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், கா்நாடக உயா்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக ஆனந்த் ரமாநாத் ஹெக்டே, சித்தையா ராச்சையா, கண்ணன் குயில் ஸ்ரீதரன் ஹேமலேகா ஆகியோா் பதவியேற்றுக்கொண்டனா். இவா்களுக்கு ஆளுநா் தாவா்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.

இந்த விழாவில், உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி, முதல்வா் பசவராஜ் பொம்மை, தலைமைச் செயலாளா் பி.ரவிக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

3 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்றுக்கொண்ட நிலையில், கா்நாடக உயா்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 46-ஆக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT