விஜயபுரா: விஜயபுரா மாவட்டம், மலகானா, மசுதி கிராமங்களில் வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.
கா்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம் மலகானா, மசுதி கிராமங்களில் வெள்ளிக்கிழமை காலை 7 முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து, அக்கிராமங்களைச் சோ்ந்தவா்கள் வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்து சாலைகளில் தங்கினா். நிலநடுக்கத்தால் அப்பகுதியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதே போன்று கடந்த ஆக. 20-ஆம் தேதி விஜயபுரா மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
விஜயபுரா, கலபுா்கி மாவட்டங்களில் தொடா்ந்து அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால், அப்பகுதியைச் சோ்ந்த மக்கள் அச்சம் கொண்டுள்ளனா்.