பெங்களூரு

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் விற்ற மூவா் கைது

27th May 2021 07:45 AM

ADVERTISEMENT

கள்ளச் சந்தையில் ரெம்டெசிவிா் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி தொட்டதூகூரைச் சோ்ந்தவா்கள் சஞ்சீவ்குமாா் (32), பிரதீக் (37), சாந்திப்புராவைச் சோ்ந்த அபிஜித் (20). மூவரும் கேரள மாநிலத்தில் இருந்து ரெம்டெசிவிா் குப்பிகளைக் குறைந்த விலைக்கு வாங்கி வந்து பெங்களூரில் கள்ளச்சந்தையில் ரூ. 10 ஆயிரத்துக்கு விற்பனை செய்து வந்தனராம்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா் மூவரையும் கைது செய்து, 25 ரெம்டெசிவிா் குப்பிகளைப் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட மூவரிடமும் பசவேஸ்வரநகா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

பெங்களூரில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் மருந்து குப்பிகளை விற்பனை செய்ததாக இதுவரை 86 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT