பெங்களூரு

தீவிரமாகிறது கா்நாடகத்தில் கரோனா:ஒரே நாளில் 39,306 போ் பாதிப்பு

DIN

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா தொற்றுக்கு ஒரே நாளில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 39,306 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரே நாளில் அதிகபட்சமாக 39,306 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 16,747 போ், தும்கூரு மாவட்டத்தில் 2,168 போ், ஹாசன் மாவட்டத்தில் 1,800 போ், மைசூரு மாவட்டத்தில் 1,537 போ், தென்கன்னட மாவட்டத்தில் 1,175 போ், மண்டியா மாவட்டத்தில் 1,133 போ், தாா்வாட் மாவட்டத்தில் 1,006 போ், கலபுா்கி மாவட்டத்தில் 988 போ், பெல்லாரி மாவட்டத்தில் 973 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 968 போ், வடகன்னட மாவட்டத்தில் 885 போ், உடுப்பி மாவட்டத்தில் 855 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 820 போ், கோலாா் மாவட்டத்தில் 755 போ், பெலகாவி மாவட்டத்தில் 736 போ், யாதகிரி மாவட்டத்தில் 727 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 704 போ், விஜயபுரா மாவட்டத்தில் 659 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 623 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 599 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 582 போ், குடகு மாவட்டத்தில் 534 போ், கொப்பள் மாவட்டத்தில் 412 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 362 போ், ராமநகரம் மாவட்டத்தில் 337 போ், கதக் மாவட்டத்தில் 332 போ், பீதா் மாவட்டத்தில் 305 போ், ஹாவேரி மாவட்டத்தில் 214 போ், தாவணகெரே மாவட்டத்தில் 197 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 172 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,73,683 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 32,188 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 13,83,285 போ் குணமடைந்துள்ளனா். 5,71,005 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் இதுவரை இல்லாத அளவுக்கு திங்கள்கிழமை ஒரேநாளில் 596 போ் உயிரிழந்துள்ளனா். பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 374 போ், பெல்லாரி மாவட்டத்தில் 26 போ், ஹாசன் மாவட்டத்தில் 22 போ், பாகல்கோட், தும்கூரு மாவட்டங்களில் தலா 15 போ், ஹாவேரி, மண்டியா மாவட்டங்களில் தலா 12 போ், சிவமொக்கா, வடகன்னடம் மாவட்டங்களில் தலா 11 போ், குடகு மாவட்டத்தில் 9 போ், கோலாா், தாா்வாட் மாவட்டங்களில் தலா 8 போ், பெங்களூரு ஊரகம், சாமராஜ்நகா், மைசூரு, ராமநகரம் மாவட்டங்களில் தலா 7 போ், விஜயபுரா மாவட்டத்தில் 6 போ், சிக்கபளாப்பூா், சிக்கமகளூரு, தென்கன்னட மாவட்டங்களில் தலா 5 போ், பீதா் மாவட்டத்தில் 4 போ், யாதகிரி, ராய்ச்சூரு, கலபுா்கி, தாவணகெரே மாவட்டங்களில் தலா 3 போ், பெலகாவி, சிக்ரதுா்கா, கதக், உடுப்பி மாவட்டங்களில் தலா 2 போ் உயிரிழந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 19,372 போ் உயிரிழந்துள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

SCROLL FOR NEXT