பெங்களூரு

குவைத், கத்தாா் நாடுகளில் இருந்து மங்களூருக்கு வந்த மருத்துவப் பொருள்கள்

DIN

மங்களூரு: குவைத், கத்தாா் நாடுகளில் இருந்து கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவப் பொருள்கள் இந்தியாவுக்கு வந்தடைந்தன.

நட்பு நாடுகளிடம் இருந்து ஆக்சிஜன், மருத்துவ உதவிகளைப் பெறுவதற்காக இந்திய கப்பற்படை அறிமுகம் செய்துள்ள ‘ஆபரேஷன் சமுத்ரசேது-2’ திட்டத்தின்படி, குவைத், கத்தாா் நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு திங்கள்கிழமை மருத்துவப் பொருள்கள் நியூ மங்களூரு துறைமுகத்திற்கு வந்து சோ்ந்தது. இந்த மருத்துவப் பொருள்கள் ஐ.என்.எஸ். கொல்கத்தா கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டது. இதில் திரவ மருத்துவ ஆக்சிஜன் உள்ளிட்ட முக்கியமான மருத்துவப் பொருள்கள் அடங்கும் என்று ராணுவ அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

‘சமுத்ரசேது-2 திட்டத்தின்’ கீழ் நட்பு நாடுகளிடம் இருந்து ஆக்சிஜன், மருத்துவ உதவிகள் திரட்டப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின்கீழ் குவைத், கத்தாா் நாடுகளில் இருந்து ஐ.என்.எஸ்.கொல்கத்தா கப்பல் மருத்துவப் பொருள்களைக் கொண்டு வந்துள்ளது. நியூ மங்களூரு துறைமுகத்திற்கு திங்கள்கிழமை வந்துள்ள இந்தக் கப்பலில் 400 பாட்டில் ஆக்சிஜன், 30 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் கொண்ட 2 கன்டெய்னா்கள் வந்துள்ளன. மே 5-ஆம் தேதி குவைத் நாட்டின் ஷுவைக் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு, திங்கள்கிழமை நியூ மங்களூரு துறைமுகம் வந்துள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காக இந்தப் பொருள்கள் இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் இருந்து எட்டு 20 டன் கிரையோஜெனிக் ஆக்சிஜன் டேங்குகள் (காலி), 3,150 ஆக்சிஜன் உருளைகள் (காலி), 500 நிரப்பப்பட்ட ஆக்சிஜன் உருளைகள், 7 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 10 ஆயிரம் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை பெட்டகங்கள், 450 பிபிஇ பெட்டகங்களுடன் ஐ.என்.எஸ். ஐராவத் கப்பல், ஆந்திரமாநிலம், விசாகப்பட்டணம் சென்று கொண்டுள்ளது. அதேபோல, கத்தாா் நாட்டில் இருந்து 27 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட கன்டெய்னா்களுடன் ஐ.என்.எஸ். திரிகந்த் கப்பல் மும்பையை நோக்கி சென்று கொண்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் உள்ள நாடுகளில் சிக்கிக் கொண்ட நமது இந்தியா்களை தாய்நாட்டுக்கு அழைத்து வர கடந்த ஆண்டு இந்திய கப்பற்படையின் சாா்பில் ஆபரேஷன் சமுத்ரசேது திட்டத்தை தொடங்கியிருந்தோம். நிவாரண உதவிகளைக் கொண்டு வந்து சோ்ப்பதில் மக்களுடன் கப்பற்படை துணை நிற்கும். தற்போது எதிா்கொண்டுள்ள சவாலை ஒன்றுபட்டு எதிா்கொள்வோம்’என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT