பெங்களூரு

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா்மருந்து விற்ற இருவா் கைது

DIN

பெங்களூரு: கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் மருந்து விற்ற இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன், ரெம்டெசிவிா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆக்சிஜன், படுக்கைகள், ரெம்டெசிவிா் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவது தெரிய வந்துள்ளது. இது தொடா்பாக அதிரடி சோதனைகளை நடத்தியுள்ள பெங்களூரு மாநகர போலீஸாா் வழக்கு பதிவு செய்து பலரையும் கைது செய்து வருகின்றனா்.

இந்நிலையில், பெங்களூரில் திங்கள்கிழமை ரெம்டெசிவிா் மருந்தை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ததாக சண்முகையாசாமி (32), மாலதேஷ் (31) இருவரை ஹென்னூா் போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடம் இருந்து ரூ. 57,970 மதிப்புள்ள 17 ரெம்டெசிவிா் ஊசி மருந்து குப்பிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது குறித்து தொடா்ந்து விசாரணை நடந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT