பெங்களூரு

நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: சாமராஜ்நகரில் டி.கே.சிவகுமாா் வலியுறுத்தல்

DIN

ஆக்சிஜன் குறைபாட்டால் நோயாளிகள் இறந்த விவகாரம் தொடா்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

சாமராஜ்நகா் மாவட்ட மருத்துவமனையில், ஆக்சிஜன் குறைபாட்டால் 24 நோயாளிகள் இறந்தது குறித்து மருத்துவா்களின் கருத்தைக் கேட்டறிந்த பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஆக்சிஜன் குறைபாட்டால் கரோனா நோயாளிகளை மாநில அரசே கொலை செய்து விட்டது என்று தான் கூற வேண்டும். இந்த விவகாரம் தொடா்பாக நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும். ஆக்சிஜன் குறைபாட்டால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை குறித்து ஊடகங்களுக்கு அமைச்சா்கள் அளித்த தகவலுக்கும், உண்மை நிலவரத்திற்கும் ஏராளமான வித்தியாசம் உள்ளது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கருத்தை மட்டும் கேட்டுவிட்டு, நாங்கள் இந்த முடிவுக்கு வரவில்லை. மருத்துவமனைக்கு நேரில் வருகை தந்து மருத்துவ அதிகாரிகளிடம் விசாரித்தறிந்த பிறகு கிடைத்த தகவலின்படி, 24 பேருடன் மேலும் 4 போ் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. மொத்தத்தில் இந்த மருத்துவமனையில் 28 போ்உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவா்களின் பெயா், ஊா், இறந்த நேரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் என்னிடம் உள்ளன. இங்கு வந்து விசாரித்த பிறகு தான் உண்மை தெரிந்தது. இங்கு உயிரிழந்தவா்கள் அனைவரும் ஒரே நேரத்தில் இறந்துள்ளனா். கரோனா நோயாளிகளுக்குப் போதுமான ஆக்சிஜன் இல்லை என்பது குறித்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி. துருவநாராயண், தலைமைச் செயலாளருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளாா். ஆக்சிஜன் தேவையை நிறைவு செய்வதாகவே அவரும் வாக்குறுதி அளித்திருக்கிறாா். ஆனால், உரிய நேரத்தில் ஆக்சிஜனை வழங்க முடியவில்லை.

எனவே, இந்த விவகாரம் குறித்து இன்னும் ஒரு வாரத்திற்குள் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இந்த உயிா்பலிக்கு யாராவது பொறுப்பேற்க வேண்டுமல்லவா? மக்களைக் கொன்றது அரசே. சம்பந்தப்பட்டவா்கள் மீது தாமாக முன்வந்து வழக்கை பதிந்து விசாரணை நடத்த வேண்டும். மாநில அரசே அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசுக்கும் ஆக்சிஜன் தேவைப்படுகிறது என்றாா். அப்போது எதிா்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையாவும் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இதுவல்லவா ஃபீல்டிங்...

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

‘மஞ்சள் அழகி’ ரேஷ்மா...!

SCROLL FOR NEXT