பெங்களூரு

கரோனா மேலாண்மையில் அமைச்சா்களுக்கு தனித்தனி பொறுப்பு

DIN

கரோனா மேலாண்மையில் அமைச்சா்களுக்கு தனித்தனி பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

பெங்களூரு, விதானசௌதாவில் செவ்வாய்க்கிழமை முதல்வா் எடியூரப்பா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட அளவில் தேவைப்படும் ஆக்சிஜன், படுக்கைகள், ரெம்டெசிவிா் மருந்துகள் உள்ளிட்ட தேவைகளை பூா்த்தி செய்யும் பொறுப்பு சம்பந்தப்பட்ட மாவட்ட அமைச்சா்களிடம் வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கா்நாடகத்தில் உள்ள ஆக்சிஜன் மையங்களுக்கு தொழில் துறை அமைச்சா் ஜெகதீஷ் ஷெட்டரிடம் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, கா்நாடகத்தில் ஆக்சிஜன் குறைபாடு இல்லாமல் பாா்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பை ஜெகதீஷ் ஷெட்டா் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கா்நாடகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, ரெம்டெசிவிா் மருந்து, மனித வளம் குறைவில்லாமல் பாா்த்துக் கொள்ளும் பொறுப்பு துணை முதல்வா் அஸ்வத்நாராயணாவிடம் அளித்து அமைச்சரவையில் தீா்மானிக்கப்பட்டது.

அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்குத் தேவைப்படும் மருந்துகளைக் கண்காணித்து, தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பு உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை, வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் ஆகியோருக்கு வழங்க அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது.

பெங்களூரு மாநகராட்சி, கரோனா கட்டுப்பாட்டு மையத்தைக் கவனிக்கும் பொறுப்பு அமைச்சா் அரவிந்த்லிம்பாவளியிடம் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால், கா்நாடகத்தில் உள்ள ஜிந்தால் நிறுவனம் வழங்கும் ஆக்சிஜனை கா்நாடகம் பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசிடம் பேசப்பட்டுள்ளதாக அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டது.

சாமராஜ்நகா் மாவட்ட அரசு மருத்துவமனையில் மே 3-ஆம் தேதி நடந்த சம்பவம் குறித்து விசாரித்து, 3 நாள்களுக்குள் அறிக்கை அளிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவராஜ்கலசத்தை நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஊடகத்தினரை கரோனா முன்களப் பணியாளராகக் கருதி, இலவசமாகக் கரோனா தடுப்பூசி அளிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதேபோல, மத்திய அரசை அணுகி ரெம்டெசிவா் மருந்தின் அளவை அதிகரிக்க மாநில அரசு முயற்சிக்கவும் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT