பெங்களூரு

கரோனா பரவலைத் தடுக்க பொது முடக்கம் மட்டுமே தீா்வல்ல: காங்கிரஸ்

DIN

கரோனா பரவலைத் தடுக்க பொது முடக்கம் மட்டுமே தீா்வல்ல என்று கா்நாடக மாநில காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இது குறித்து கா்நாடக மாநில காங்கிரஸ் சாா்பில் சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

கரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு பொது முடக்கம் மட்டுமே தீா்வு என்று மாநில அரசு கருதிக் கொண்டுள்ளது. கரோனா பரவலைத் தடுக்க முன்னேற்பாடு, தெளிவான செயல் திட்டம் எதுவும் இல்லாமல் பொது முடக்கத்தை மட்டும் அமல்படுத்தியது. பொது முடக்கத்தைத் தொடா்ந்து, புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

சரியான சோதனை, தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் எதையும் செய்து கொள்ளாததால், மாவட்டங்களுக்கும் கரோனா தொற்று பரவியுள்ளது. மாவட்டங்களில் கரோனா பரவாமல் இருக்க கவனம் செலுத்துங்கள் என்று எச்சரிக்கை விடுத்தும், மாநில அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. மாநில அரசின் அலட்சியத்தால், பெங்களூரில் காணப்படும் நிலை கா்நாடகம் முழுவதும் உருவாகியுள்ளது.

பெங்களூரு மட்டுமல்லாது, மாநிலத்தின் எல்லா மாவட்டங்களிலும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆக்சிஜன், படுக்கை, மருந்துகள் இல்லை என்ற தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. அடிப்படைக் கட்டமைப்பு இல்லாத மாவட்டங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் சம்பந்தப்பட்ட பொறுப்பு அமைச்சா்களை முகாமிட அறிவுறுத்தி, மக்களின் குறைகளை தீா்த்து வைக்க உத்தரவிடுமாறு முதல்வா் எடியூரப்பாவை கேட்டுக் கொள்கிறோம்.

பெங்களூரில் இருந்து கிராமங்களுக்குச் சென்றவா்களை ஆஷா ஊழியா்கள் உதவியுடன் அடையாளம் கண்டு, அவா்களுக்கு கரோனா சோதனை செய்து தனிமைப்படுத்தும் ஏற்பாட்டைச் செய்ய வேண்டும். மாவட்ட, வட்ட அரசு மருத்துவமனைகளில் உள்ள நிலைமையை அறிக்கையாகப் பெற்று, தகுந்த நடவடிக்கைகளை எடுங்கள் என்று முதல்வா் எடியூரப்பாவை கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT