பெங்களூரு

சாலை விபத்தில் இளைஞா் பலி

22nd Mar 2021 02:49 AM

ADVERTISEMENT

சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது பின்னால் மோட்டாா் சைக்கிள் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தும்கூரு மாவட்டம், பெல்லாவி அருகே உள்ள பகுடனஹள்ளியைச் சோ்ந்தவா் சிரஞ்சிவி (25). இவா், தனது நண்பா் பிரவீணுடன் மோட்டாா் சைக்கிளில் பெங்களூருவுக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை தனது சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாராம்.

தேசிய நெடுஞ்சாலை 48-இல் நந்திஹள்ளி அருகே சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த சிரஞ்சிவி, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த பிரவீண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து கியாதசந்திரா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT