பெங்களூரு

வீட்டில் புகுந்த சிறுத்தைப்புலி சிக்கியது

22nd Mar 2021 02:48 AM

ADVERTISEMENT

உடுப்பி மாவட்டத்தில் வீட்டில் புகுந்த சிறுத்தைப்புலி, அறை ஒன்றில் சிக்கியது.

உடுப்பி மாவட்டம், பிரம்மாவா் வட்டம், நைலாடி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நாய் ஒன்றை சிறுத்தைப்புலி விரட்டி வந்தது. சிறுத்தைப்புலியிடம் இருந்து தப்பிக்க ஓடிய நாய், அருகில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்தது.

சத்தம் கேட்டு எழுந்த அந்த வீட்டில் உள்ளோா் சிறுத்தைப்புலி நுழைந்த அறையை வெளியில் இருந்து பூட்டிவிட்டு வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனா்.

மண்டல வன அதிகாரி சங்கரநாராயணா சிதானந்தப்பா தலைமையில் அங்கு வந்த வனத் துறையினா் ஒருமணி நேரம் போராடி வீட்டில் இருந்து சிறுத்தைப்புலியை கூண்டுக்குள் அடைத்தனா். பின்னா் வாகனத்தில் ஏற்றி சென்ற வனத் துறையினா் சிறுத்தைப்புலியைப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT