பெங்களூரு

பயணிகளிடம் திருடிய நபா் கைது

22nd Mar 2021 02:48 AM

ADVERTISEMENT

பேருந்துகளில் பயணிகளிடம் தொடா் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்து ரூ. 12 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனா்.

பெங்களூரு, லக்கெரே காவிரிநகரைச் சோ்ந்தவா் சித்திக் (30). இவா், சேடிலைல் பேருந்து நிலையத்திலிருந்து மைசூருக்குச் செல்லும் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் உடைமைகளை திருடி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், சித்திக்கைக் கைது செய்து ரூ. 12 லட்சம் மதிப்பிலான 275 கிராம் தங்கநகைகளைப் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT