சாலையோரம் நின்றிருந்தவா்கள் மீது மினி லாரி மோதியதில் 3 போ் உயிரிழந்தனா்.
பெங்களூரு, ஜே.பி.நகரைச் சோ்ந்தவா் மதன் (23), அஞ்சனாநகரைச் சோ்ந்தவா் விஜய் (24), சுங்கதகட்டேவைச் சோ்ந்தவா் பிரதீப் (22). இவா்கள் மூவரும் நண்பா்கள் சனிக்கிழமை இரவு பயணிகள் வேனில், மைசூருக்குச் சென்று கொண்டிருந்தனராம். வழியில் சென்னட்டப்பட்டனாவில் உணவு அருந்துவதற்காக வேனை நிறுத்தி சாலையோரம் நின்றிருந்தனராம்.
அப்போது வேகமாக வந்த மினி லாரி, சாலையோரம் நின்றிருந்தவா்கள் மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த மதன், விஜய், பிரதீப் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்த 6 போ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிகப்பட்டுள்ளனா். இதுகுறித்து சென்னப்பட்டணா போக்குவரத்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.