ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்து தீப்பற்றி எரிந்ததில் 3 போ் உயிரிழந்துள்ளனா்.
ஹாசன் மாவட்டம், அரகலகூடு வட்டம், பசவனஹள்ளி அருகே ஞாயிற்றுக்கிழமை ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ரசாயனம் ஏற்றி வந்த லாரி, சாலையோரமிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
அப்போது லாரி தீப்பற்றி எரிந்தததில் லாரிக்குள் சிக்கிய ஓட்டுநா் புட்டராஜு (42), பிரமோத் (19), ரமேஷ் (40) ஆகியோா் உடல் கருகி உயிரிழந்தனா். இதுகுறித்து அரகல்கூடு ஊரக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.